|
Topic |
: Obeisance to a Great Soul |
Speech Duration |
: 01 Mins & 26 Sec |
File Size |
: 1.46 Mega Bytes |
Updated on |
: Tuesday, November 11, 2015 |
இறையடி சேர்ந்த இசைமேதை
சீராட்டி வளர்த்தாள் தாய்;
அது அவள் தாலாட்டோடு நின்றுபோனது.
அடுத்து நம்மை மகிழ வைப்பது பாராட்டு;
அது பிறர் மனம் மகிழ்ந்து கூறுவது;
ஆனால் மனிதர் உள்ளம் சுருங்கியது.
சுயநலத்தால் நெருங்கியது.
ஆயிரத்தில் ஒருவர் பாராட்டுவார்.
அப்படியான ஆயிரத்தில் ஒருவர் இன்று மறைந்தார்.
அவரால் இசை உலகுக்கு இழப்பு.
ரசிகர்களுக்கு ஒரு தவிப்பு.
அவர் தாசன் முருகனுக்கு;
நேசன் எம்மனோர்க்கு;
அவர் பித்துக்குளி முருகதாஸ் என்ற மாமேதை!
சூரிய சதகத்தை அடியேன் வீரிய உரையுடன் சொற்பொழிவாக உதிர்க்கிறேன் என்று அறிந்து ஓடி வந்தார் புதுவைக்கு.
என் உரை கேட்க நாடிவந்தார்.
போர்த்தினார் பொன்னாடை.
வாழ்த்தினார் என்னை!
பரிசுதந்து மனம் மகிழ்ந்தார்!
கைகுலுக்கி உரை நிகழ்த்தினார்.
அந்த மகா பக்தரின் ஆன்மா சென்ற திசைநோக்கி செலுத்துகிறோம் அஞ்சலி!
-D.A.ஜோசப்
|
|